ரித்து வர்மா - வைஷ்ணவ் தேஜ்... திரையுலகில் மற்றோரு காதல் ஜோடி...?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரித்து வர்மா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரை காதலிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை ரித்து வர்மா தமிழில் தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய புகழையும் ரசிகர் வரவேற்பையும் பெற்று தந்தது தேசிங்கு பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படமே. இதற்குப் பிறகு ’புத்தம் புது காலை’, ’நித்தம் ஒரு வானம்’, ’மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ், ‘உப்பன்னா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரைத் தான் ரித்து வர்மா காதலிப்பதாகவும், இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடித்ததில்லை என்றாலும், அவ்வப்போது சந்தித்து தங்கள் நட்பையும் காதலையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் பரவி வருகின்றன.