பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கிறாரா நடிகர் ஆர்ஜே பாலாஜி...?

RJ balaji

ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார்.இவர் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான LKG என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாகவும், அதில் நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான  குட் நைட் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், ஆர் ஜே பாலாஜி ஒரு படம் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை பா ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கவுள்ளார்.ஆர் ஜே பாலாஜி இதுவரை நடித்த படங்களிலேயே, அதிக பொருட் செலவில் உருவாகுவது இந்த படம் தானாம். கிட்டத்தட்ட ரூபாய் 16 கோடி செலவில் இப்படம் தயார் ஆகுவதாக தகவ்கள் வெளியாகியுள்ளன.    

Share this story