ஓடிடியில் வெளியாகும் ஆஜே பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு

run baby run

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்ய ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. 

run baby run

மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா‌ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஒரு கொலையில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ, அதிலிருந்து எவ்வாறு மீளுகிறார் என்பதுதான் கதை. 

run baby run

இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாகவும், த்ரில்லிங்காகவும் மிரட்டும் வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

Share this story