பிப்ரவரி ரிலீசுக்கு தயாராகியுள்ள 'ரன் பேபி ரன்'... புத்தாண்டையொட்டி ஆர்ஜே பாலாஜி பட போஸ்டர் வெளியீடு !

run baby run

புத்தாண்டையொட்டி ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா‌ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இந்தப் படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார்.

run baby run

சாம் சி எஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

run baby run

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி இப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Share this story