ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்' எப்போது ?... புதிய அப்டேட்

run baby run

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள 'ரன் பேபி ரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. சாம் சி எஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

run baby run

இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா‌ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் தீம் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story