வெளியீட்டுக்கு தயாரான ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’.. ரிலீஸ் குறித்து பக்கா அப்டேட்

SingaporeSaloon

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

பிரபல ஆர்ஜேவான பாலாஜி, சினிமா நடிகராகி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சலூன் தொழிலாளியாக நடித்துள்ளார்.

SingaporeSaloon

இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு ‘லியோ’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஜூலை 28-ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. 

 

Share this story