ஆர்.ஜே பாலாஜி புதிய படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் : கடைசில Happy Ending தான்...!

rj balaji
ஆர்.ஜே பாலாஜி கடைசியாக சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சூர்யாவின் 45 திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ளார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளியானது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்குமுன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக ஹேப்பி எண்டிங் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான அம்மாமுத்து சூர்யா இயக்கவுள்ளார். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற்கொள்கிறார். படத்தின் டைட்டில் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டைட்டில் டீசரின் காட்சிகள் மிகவும் ரத்தம் தெரிக்க தெரிக்க இடம் பெற்றுள்ளது. பாலாஜி அவரது காதல் தோல்வி கதைகளை கூற கூற இந்த வீடியோ அமைந்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தம்மன் மேற்கொள்கிறார். இப்படத்தை குட் நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

Share this story