ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்' ரிலீஸ் வீடியோ

sorga vasal

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது.


ஆர்.ஜே  பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் 29 அன்று திரையரங்குகளில் உங்களுக்கு ஒரு அசாதாரண சினிமா அனுபவம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு ரிலீஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி கேரியரில் இது முக்கியத் திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

Share this story