ஆர்.ஜே.பாலாஜியின் ’சூர்யா45’ படத்தலைப்பை வெளியிட்ட படக்குழு..!!

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து , ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி நடராஜன், சிவதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா 45 படத்தின் தலைப்பை படக்குழு இன்று காலை 10 மணிக்கு வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. முன்னதாக வேட்டைக் கருப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது படக்குழு சூர்யா 45 படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கருப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது!
Here’s our #Karuppu for you..!
— Suriya Sivakumar (@Suriya_offl) June 20, 2025
Wishing you all happiness @RJ_Balaji #கருப்பு@trishtrashers @dop_gkvishnu @SaiAbhyankkar @natty_nataraj #Indrans #Swasika @prabhu_sr@DreamWarriorpic pic.twitter.com/a7YQ3l0NS7