'ராபின்ஹூட்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ராபின்ஹுட். இப்படத்தில் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
THIS SUMMER'S PERFECT ENTERTAINER 💥💥#Robinhood BOOKINGS OPEN NOW❤️🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) March 23, 2025
🎟️ https://t.co/ogblfmwZTd
GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash #RajendraPrasad @vennelakishore @DevdattaGNage #SaiSriram @EditorKoti #RaamKumar… pic.twitter.com/y7NB3y2XIn
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராபின்ஹுட் திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.