ராபின்ஹுட் படத்தின் 3வது பாடல் ரிலீஸ் அப்டேட்..

robinhood

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் படத்தின் 3வது பாடல் குறித்த  தகவல் வெளியாகி உள்ளது.  

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ள திரைப்படம்  ராபின்ஹுட். இப்படத்தில் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 



 
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராபின்ஹுட் திரைப்படம் மார்ச்  28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ராபின்ஹுட் திரைப்படத்தின் 3வது பாடல் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பாடலில் கேதிகா ஷர்மா நடனமாடியுள்ளார். 

Share this story