ஆசிரியருடன் மாணவன் போட்டியிடும் கதையில் ரோபோ சங்கர் -என்ன டைட்டில் தெரியுமா ?

robo Shankar
ஒரு மாணவன் தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராவிதமாக அவன் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளால் ஆசிரியருக்கும், அவனுக்கும் இடையிலான இணக்கம் தடைபடுகிறது. இதனால் அவன் மிகவும் பாதிக்கப்படுகிறான். மாணவனுக்கும், ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா, மாணவனா என்ற கதையுடன் ‘ஈகோ ராமன்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் கதையின் நாயகனாக மறைந்த ரோபோ சங்கர் நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ், லதா நடித்துள்ளனர். அஸ்ருதா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுதா.ஜி தயாரித்துள்ளார். கணேசன் நாச்சிமுத்து எழுதி இயக்கியுள்ளார். ரெய்மன் ராட்ரிக்ஸ் பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. இம்மாத இறுதியில் படத்தை திரையிட உத்ரா புரொடக்‌ஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.

Share this story