ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்துக்கள் !

Indraja-Shankar

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் பிரபல நடிகராக மாறியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள். தந்தையை போன்று அவரும் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தின் மூலம் நடிகையான அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

Indraja-Shankar

அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தில் கதாநாயகி அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து புதிய படங்களிலும் நடித்து வருகிறார். அதேநேரம் குண்டான தோற்றத்தில் இருக்கும் இந்திரஜா உருவகேலியிலும் சிக்கினார். இருப்பினும் மனம் தளராத அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாவை தவிர சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு வருகிறார். 

Indraja-Shankar

இந்நிலையில் நடிகை இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகரின் கமெண்ட்டிற்கு தனது திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். தனது திருமணத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகை இந்திரஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

Share this story