‘ரகு இருந்திருந்தால்…’- ரகுவரனின் நினைவு தினத்தில் ரோகிணி உருக்கம்.

photo

15ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் சினிமா உலகம் ரகுவரன் என்னும் பொக்கிஷத்தை இழந்த நாள். இதனை நினைவு கூர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அவரின் மனைவி ரோகிணி.

photo

எதார்த்தமான நடிப்பு, தனித்துவமான குரல் என தனக்கு கொடுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞன் ரகுவரன். அதிலும் இவரது எதிர்மறை கதாபாத்திரங்களுக்கென இன்றுவரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  இவர் கடந்த 1996ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2000ஆம் ஆண்டு ரிஷி வரன் என்ற மகன் பிறந்தார். இவர்களின் இல்லறவாழ்கை 2004 ஆம் ஆண்டுடம் முடிவிற்கு வந்தது. கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னரும் பல படங்களில் நடித்தார்.


ரகுவரன் 2008ஆம் ஆண்டு இதேநாளில், அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக உடல் உறுப்புகள் செலலிழந்து காலமானார். இந்த நிலையில் அவரது மனைவி ரோகிணி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மார்ச் 19,2008  ஒரு சாதாரண நாளாக தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது, ரகு உயிரோடு இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார்; மேலும் ஒரு நடிகராக மகிழ்ந்திருப்பார்” என தனது சமூகவலைதளபக்கத்தில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Share this story