ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் அனுமதிக்காத விவகாரம்... கமல், வெற்றிமாறன் கண்டனம் !

kamal

 ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை அனுமதிக்காததற்கு நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

roghini

 சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி  திரையரங்கில் சிம்பு நடிப்பில்  வெளியான 'பத்து தல' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை பார்க்க நேற்று காலை நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் கையில் டிக்கெட்டுடன் வந்தனர். ஆனால் அவர்களை திரையரங்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.  

இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். 


இதேபோன்று இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். 

vetrimaran

 

 


 

Share this story