மொட்டை மாடியில் சிறகடிக்க ஆசை ரோகினி செய்த ரீலிஸ் வைரல் !

1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் TRP ரேட் அதிகமாக இருக்கும் நாடகம் சிறகடிக்க  ஆசை. பிரபல நடிகர் சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் இதில் கதாநாயகனாக இருக்கும்  முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிப்பதோடு ஹீரோயினான  மீனா கதாபாத்தில் கோமதி பிரியாவும் நடிக்கின்றார். இந்த நிலையிலேயே இதில் ரோகிணியின் சில வீடியோ வெளியாகியுள்ளது.

சல்மா அருண் என்பவர் நடிக்கும் கதாபாத்திரமே ரோகிணி ஆகும். முத்துவின் அண்ணியாக வரும் இவர் குறித்த சீரியலின் பின்பே பிரபலமானார் எனலாம். இதற்கு முன்பே பல சீரியல்களில் உதாரணமாக  ராஜா ராணி , பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் சிறகடிக்க  ஆசை நாடகத்தின் பின் பிரபலமாகி உள்ளார். இவ்வாறான இவர்  சமீபத்தில் மொட்டை மாடியில் நின்று ரீல்ஸ் செய்து அதனை தனது இன்ஸ்ட்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பல சிறகடிக்க  ஆசை ரசிகர்கள் சீரியலில் டெரர் வில்லியாக இருந்தாலும் வெளியில் ஹீரோயின் போன்று அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். 

Share this story