நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

roja

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.

தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். 

Share this story