'நேசிப்பாயா' பட விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்!

nesippaya

'நேசிப்பாயா' படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ, சிநேகா தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நேசிப்பாயா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.  இந்நிலையில், 'நேசிப்பாயா' படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ராகுல் கைப்பற்றி இருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களில் தயாரிப்பில் பணிபுரிந்தவர் ராகுல். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய் நடித்த ‘கோட்’8, அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேக் அக்லி’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியது நினைவுக் கூரத்தக்கது.

 

Share this story