அசத்தும் ‘ரவுடி பேபி’ பாடல் – 1.5 பில்லியன் பார்வையாளர்களா!

photo

தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடித்த படம் ‘மாரி 2’ இந்த படத்தை 2018-ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். படம் வெற்றிபெறவில்லை என்றாலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

photo

யுவன் சங்கர் ராஜா இசையில், பிரபு தேவா நடன இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் துள்ளளலான ஆட்டம், காண்போர் அனைவரையும் ஆட்டம் போடச் செய்தது. பலரும் ரிப்பீட் மோடில் இந்த பாடலை கேட்டு வந்தனர். அதேப்போல பல பார்வையாளர்களை பெற்று பாடல் யூடியூபில் சாதனையைகளை குவித்து வந்தது. குறிப்பாக கொரோனா சமயத்தில் கூட இந்த பாடலின் வியூச் எகிறியது.

photo

இந்த நிலையில் ‘ரவுடி பேபி’ பாடலின் புதிய சாதனையாக யூ டியூபில்  1.5 பில்லியன், அதாவது 150 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமாவில் இத்தனை பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் ‘ரவுடி பேபி’ பாடல்தான். இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Share this story