‘ருத்ரன்’ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு – எங்கு, எப்போது? தெரியுமா!...

ராகவா லாரன்ஸ்ஸின் வெறித்தனமான நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து மாஸ்ஸான தகவல் வெளியாகியுள்ளது.
5 ஸ்டார் கிரேஷன் நிறுவனர் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார் திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தின் ராகவாலாரன்ஸ் அதிரடி ஆக்ஷனில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு இம்மாதம் 5ஆம் தேதி, நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில், மாலை 5மணிக்கு நடைபெற உள்ளது.
#Rudhran grand trailer & audio launch on APRIL 5🥁🔥
— Five Star Creations LLP (@5starcreationss) April 3, 2023
Venue : Chennai Trade Centre@offl_Lawrence @realsarathkumar @priya_Bshankar @gvprakash @SamCSmusic @kathiresan_offl @RDRajasekar @5starcreationss#RudhranFromAPRIL14 pic.twitter.com/0N0Moutcga
இதற்காக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா' திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.