ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய சித் ஸ்ரீராம்.. முதல்முறையாக இணைந்த கூட்டணி !

Rudhran

 ஜிவி பிரகாஷ் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. 

Rudhran

 இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அவரது இசையில் உருவான இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் 3வது பாடல் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். முதன்முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ள பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

Share this story