‘காஞ்சனா’ படத்தின் அடுத்த பாகம் எப்போது ? - நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த செம்ம அப்டேட்

Rudhran

‘ருத்ரன்’ படத்திற்கு வெற்றிக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான் காரணம் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

Rudhran

பிரபல நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள இப்படம்  கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியானது. வெளியாகி மூன்று நாட்களான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. 

Rudhran

இந்நிலையில் ‘ருத்ரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கோவையில் இன்று ரசிகர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ருத்ரன்’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மூன்று வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கோவிட்டுக்கு பிறகு மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது. சிறிய படங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். 

Rudhran

மேலும் பேசிய அவர், ஒரு சிறிய இடைவெளி விட்டு காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பகுதி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ‘சந்திரமுகி 2’ படத்தின் அனைத்து பணிகளையும் பி வாசு பார்த்துக் கொள்கிறார் என்று கூறினா​ர். 

 

 

 

Share this story