ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் -என்ன டைட்டில் தெரியுமா ?

rukmani

கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் ருக்மிணி வசந்த், தற்போது மலையாள படத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதி ேஜாடியாக ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடித்தார்.அடுத்து ரிஷப் ஷெட்டிக்கு வில்லியாக நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம், அவருக்கு இந்திய அளவில் அதிக புகழை கொடுத்தது.

தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ என்ற பான் இந்தியா படத்தில், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள ருக்மிணி வசந்த், ‘மல்லுவுட் திரையுலகிற்கு என்னை அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் நன்றி’ என்று சொன்னார். யஷ்ஷுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ என்ற பான்வேர்ல்ட் படம், வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

Share this story