மணிரத்னம் இயக்கத்தில் ருக்மணி வசந்த்..?

rukmini

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் நவீன் பொலிஷெட்டி தெலுங்கில் ஜதி ரத்னலு, ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானார். தக் லைஃப் படம் வெளியானதும் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

rukmini

இந்த நிலையில், நவீன காதல் கதையாக உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும் நாயகியாக நடிக்க நடிகை ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சப்த சாகரதாச்சே எல்லோ படம் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ருக்மணி தமிழில் ஏஸ், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story