பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து வதந்தி... மகன் விஜய் யேசுதாஸ் விளக்கம்...

yesudas

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய இசைத்துறையில் பிரபல பாடகராக வலம் வருபவர் கே.ஜே.யேசுதாஸ். தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 50,000-க்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவரது தெய்வீக பாடல்கள் மிகப் பிரபலமானதாக இருக்கிறது.  இந்த நிலையில் யேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது.இதனால், பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். yesudas

இந்த நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் எட்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். இவரது மென்மையான குரல் ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story