LCU வில் இணைவதாக வந்த தகவல் உண்மை இல்லை : நடிகர் மாதவன் விளக்கம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு LCU ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவர் இயக்கிய கைதி திரைப்படத்தையும் விக்ரம் திரைப்படத்தையும் இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கினார் லோகேஷ். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸான விஷயமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து LCU வில் படமெடுக்க இருப்பதாகவும் அறிவித்தார் லோகேஷ். அதன்படி விஜய்யை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படத்திலும் LCU வை லோகேஷ் புகுத்தினார். அதன் பிறகு அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் கைதி 2 திரைப்படத்தையும் LCU வில் தான் உருவாக்கவுள்ளார்.
இந்நிலையில் தான் இயக்கும் படங்களில் மட்டுமல்லாமல் தான் தயாரிக்கும் படத்திலும் LCU டெக்னீகை பயன்படுத்த இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் கதையில் அவரே தயாரிக்கும் திரைப்படம் தான் பென்ஸ். இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
அதனைத்தொடர்ந்து பென்ஸ் திரைப்படமும் LCU தொடர்புடைய படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகின்றார். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் ராகவா லாரன்ஸை தான் முதலில் லோகேஷ் நடிக்க வைக்கலாம் என நினைத்தார். ஆனால் அப்போது லாரன்ஸால் விக்ரம் படத்தில் நடிக்கமுடியாமல் போனது.அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அந்த ரோலில் நடித்தார். தற்போது தான் தயாரிக்கும் படத்தில் ராகவா லாரன்ஸை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் லோகேஷ். அந்த வகையில் இபபடமும் LCU தொடர்புடைய படமாக பென்ஸ் உருவாகவுள்ளது தனி சிறப்பாக பார்க்கப்படுகின்றது.
Hey this is news to me .😂as much as it sounds exciting and I would love to be part of a universe like this. I’m surprised with this news because I have no clue about this. Madhavan joins LCU as he roped in for Raghava Lawrence's 'Benz'…. https://t.co/UkYgaidLit
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 12, 2024
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. LCU வில் மாதவனும் இணைய இருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகத்திற்கு ஆளானார்கள். ஆனால் அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை, தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார் மாதவன். தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட மாதவன், நான் பென்ஸ் படத்தில் இணையவில்லை. இந்த தகவலை நானே இப்பொது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் LCU யூனிவெர்சில் நான் இணைய ஆசைப்படுகின்றேன். இந்த தகவலை கேட்டு எனக்கே ஆச்சர்யமாக தான் உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.