நாளை வெளியாகவுள்ள ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ஸ்னீக்பீக் காட்சி வெளியீடு.

photo

திரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள ‘ரன் பேபி ரன்’ திரைப்பாடத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

photo

ஆர்ஜே, நகைசுவை நடிகர், கதாநாயகன் என பன்முக திறமை கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. இவர் கதாநாயகனாக நடித்த  எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இவர் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் மற்றும் ரன் பேபி ரன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. இதில் ரன்பேபிரன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ,ஆர்.ஜே.பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா, கேபிஒய் பாலா ஆகியோர் நடித்துள்ளரன் பேபி ரன்திரைப்படத்திற்கு சான் சி எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.

அந்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டினுள் இருந்து கீழே குதிக்க ஆயத்தமாகியுள்ளார், இறுதியில் அவர் குதித்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த காட்சி எதிர்பார்பை கூட்டியுள்ளது.

 

Share this story