'ஒரு உயிரே போய்விட்டது' - ஆர்ஜே பாலாஜி வேதனை !

rj Balaji

இளைஞர்களுக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி சில அறிவுரைகளை கூறியுள்ளார். 

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.  டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

rj Balaji

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆர்ஜே பாலாஜி, இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். அதில் சமீப காலமாக படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களை விட ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒரு உயிரே போய்விட்டது. 

rj Balaji

திரைப்படங்களின் வசூல் நிலவரம் ரசிகர்களுக்கு தேவையில்லாத ஒன்று. இதனால் அவர்களுக்கு நேரம் தான் வீணாகிறது. ஒரு திரைப்படம் வெளியாகும் போது நல்லா இருக்கிறதா, இல்லையா மட்டும் சொல்லுங்க. படத்தின் வசூலை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என அவர் தெரிவித்தார். 

 

 

 

Share this story