எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த கூரன் படத்தின் டிரெய்லர் வெளியானது

SAC

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ’கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.


'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு நாய் அதன் குட்டியை விபத்தில் பறிக்கொடுகிறது. அந்த விபத்திற்கு காரணமானவர்களின் மீது நாய் புகாரளிக்கிறது. இந்த வழக்கை SAC நீதி மன்றத்தில் வாதாடுகிறார். இந்த காடிகள் டிரெய்லரின் இடம் பெற்றுள்ளது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Share this story