இசைஞானியை சந்தித்த ‘சாமானியன்’ படக்குழு.. வைரலாகும் புகைப்படங்கள் !

saamaniyan

 ‘சாமானியன்’ படக்குழுவினர் இன்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

saamaniyan

90-களில் கிராமத்து கதைக்களத்தில் நடித்து பிரபலமானவர் ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ராமராஜனின் 45வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

saamaniyan

இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆர்.ராகேஷ் இயக்கும் இப்படத்தை Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரித்து வருகிறார். அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

saamaniyan

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் குழுவினர் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story