தள்ளிப்போகும் அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’-என்ன காரணம் தெரியுமா?

photo

அசோக் செல்வன் நடிப்பில் நாளை வெளியாக இருந்த ‘சபாநாயகன்’ படம், சில பல காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது.

photo

விஸ்வரூபம்,விஸ்வரூபம்2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளவர் கார்த்திக். இவர் இயக்கியுள்ள படம்சபாநாயகன்’. கிளீயர் வாட்டர் பிலிம்ஸ், சினிமா மற்றும் கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நாளை வெளியாவதாக இருந்தது.


ஆனால் புயல், வெள்ளம் காரணமாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சென்சார் பணிகள் தாமதமானதால் படம் நாளை வெளியாகாமல் வரும் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அசஒக் செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

Share this story