"அது முற்றிலும் பொய்யான தகவல்"-இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் மறுக்கும் விஷயம் என்ன தெரியுமா ?
1777339841000
தமிழ் படவுலகில் வேகமாக முன்னேறி வருகிறார், இளம் இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர். சமீபத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சாய் அப்யங்கருடன் இணைகிறோம் என்று பதிவிட்டிருந்தனர். அதை பார்த்த சிலர், சாய் அப்யங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று தகவல் பரப்பினர். தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள சாய் அப்யங்கர், ‘அது முற்றிலும் பொய்யான தகவல்.
நான் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். நான் ஹீரோவாக நடிக்கவில்லை. உண்மையில் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றே தெரியாது. என்னால் யதார்த்தமாக நடிக்க முடியும் என்றால், எப்போதோ நான் நடிக்க சென்றிருப்பேன். எனக்கு இசையில் மட்டுமே நாட்டம் அதிகம்’ என்றார்.

