STR 49 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம்

str49

‘எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானாலும், படக்குழு அதனை உறுதி செய்யாமல் இருந்தது. தற்போது சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார் என்பதை சிம்பு தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

 

 



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு தனது எக்ஸ் தளத்தில் “இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த புதிய அத்தியாயத்தை இசையுடன், புதிய சக்தியுடனும் தொடங்குகிறேன். ‘எஸ்.டி.ஆர் 49’ படத்துக்கு சாய் அபயங்கரை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுடன் சாய் அபயங்கருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க கல்லூரி பின்னணியில் இதன் கதையினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராம்குமார். இதன் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this story