அட்லி- அல்லு அர்ஜூன் கூட்டணியில் இணையும் சாய் அபயங்கர்...!

அட்லி- அல்லு அர்ஜூன் இணையும் மாஸ் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
Magic with mass & a world beyond imagination! #AA22
— Allu Arjun (@alluarjun) April 8, 2025
Teaming up with @Atlee_dir garu for something truly spectacular with the unparalleled support of @sunpictures pic.twitter.com/mTK01BVpfE
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜூனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைக்கு படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது. அதன்படி, சூர்யா 45, எஸ்டிஆர் 49, பென்ஸ், பிஆர்04, ஏஏ22Xஏ6 என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.