சாய் அபயங்கரின் 3-வது Independent ஆல்பம்-ன் ப்ரோமோ வெளியீடு

sai

கட்சி சேர, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3-வது Independent ஆல்பம்-ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் பல 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் கடந்தாண்டு தொடக்கத்தில் ’கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் ’ஆசை கூட’ என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.


சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை தேடி வந்தது. கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story