‘ஓம்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கும் சாய் பல்லவி -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

sai pallavi

தமிழ்ப் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து, அந்தந்த மொழி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தமிழில் ‘தாம் தூம்’, ‘தியா’, ‘மாரி 2’, ‘என்ஜிகே’, ‘பாவ கதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்தில் ‘ஓர் இரவு’, ‘கார்கி’, ‘அமரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்மூட்டி, தனுஷ் இணைந்து நடிக்கும் ‘ஓம்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இது வரும் நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்துக்கு முன்பு சாய் பல்லவி இந்தியில் நடித்துள்ள ‘ராமாயணா’ என்ற படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படமே சாய் பல்லவியின் பாலிவுட் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரே மாதத்தில் அவருக்கு இரண்டு முக்கியமான படங்கள் திரைக்கு வருவது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ‘ராமாயணா’ படத்தில் சாய் பல்லவி ஏற்றுள்ள சீதை கேரக்டர், அவரது பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தவிர, மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘இஞ்சி வெல்லம்’ என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்துள்ளார்

Share this story