தங்கையின் திருமண நிகழ்ச்சியில் படுகா டான்ஸ் ஆடிய சாய்பல்லவி

தங்கையின் திருமண நிகழ்ச்சியில் படுகா டான்ஸ் ஆடிய சாய்பல்லவி

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக தமிழில் அவர் நடித்த ‘கார்கி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான ‘விராட பருவம்’ நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது தமிழில் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் ‘SK21’ படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், சாய்பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் காதலிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். தற்போது நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவி அவரது பாரம்பரிய நடனமான படுகா ஆடினார். 
 

Share this story