திருமணமான நடிகருடன் தொடர்பா? சாய் பல்லவி குறித்து மீண்டும் எழுந்த சர்ச்சை

sai pallavi


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அமரன், நாக சைதன்யாவுடன் தண்டல் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை சாய் பல்லவி பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்துகொண்டார் என கூறி புகைப்படம் ஒன்று வைரலானது.ஆனால், அது படப்பிடிப்பின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியாமல், சிலர் அதனை தவறாக வைரல் செய்து வந்தனர். பின் உண்மை என்ன என்பது தெரியவந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

sai pallavi

இதன்பின் தற்போது அதே போன்ற சர்ச்சை மீண்டும் தெலுங்கு திரை வட்டாரத்தில் இருந்து எழுந்துள்ளது. நடிகை சாய் பல்லவி நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று, அந்த நடிகருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.தெலுங்கு திரை வட்டாரத்தில் உள்ள ஊடகங்களில் இதுகுறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் ரசிகர்கள் பலரும் இதுவே வந்ததியாக தான் இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Share this story