"பக்தையாக வேண்டிக்கொண்ட பிறகே அதில் நடித்தேன்’ -சீதையாக நடித்தது பற்றி சாய் பல்லவி

sai pallavi

 பன்மொழி படம், ‘ராமாயணா’. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசை அமைத்துள்ளனர். சீதையாக நடித்தது குறித்து பேசிய சாய் பல்லவி, ‘ஒரு கேரக்டரில் நடிக்கும்போது, அதற்கு என்னால் என்ன சிறப்பு செய்ய முடியும் என்று யோசிப்பேன்.
சீதை போன்ற புனிதமான கேரக்டரில் நடித்தபோது, அதிலிருந்து நான் என்ன பெற்றுக்கொள்ள போகிறேன் என்ற எண்ணத்துடன், என்னை முழுமையாக அர்ப்பணித்தேன். ‘சீதையே, நீங்களே என் மூலம் கதாபாத்திரத்தில் வாழுங்கள்’ என்று ஒரு பக்தையாக வேண்டிக்கொண்ட பிறகே அதில் நடித்தேன்’ என்றார்.
தனது வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, ‘சுயநலம் இல்லாதவராக, தனது தவறுகளை ஒப்புக்கொள்பவராக, எனது சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக, அவருக்கு நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும்’ என்றார்.

Share this story