'Heart of amaran'... அமரன் படத்தில் சாய் பல்லவியின் மனதை வருடும் ப்ரோமோ வெளியீடு!

sai pallavi

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக கட்டுமஸ்தான உடல்வாகுடன், ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

 

null



அமரன் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று சாய் பல்லவி கதாபாத்திர வீடியோவை அமரன் படக்குழு வெளியிட்டுள்ளது. Indhu rebecca varghese என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி இப்படத்தில் நடித்துள்ளார்.
 

இந்த ப்ரோமோ வீடியோவில் முதலில் முகுந்த் வரதராஜனின் மனைவி தோன்றுகிறார். அவர் குடியரசு தினத்தன்று தனது மறைந்த கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் சார்பாக விருது வாங்குகிறார். அதனை தொடர்ந்து சாய் பல்லவி சிவகார்த்திகேயனை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் "இக்கடலுக்கும் ஆகாசத்திற்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும், அவனுக்கும்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த அமரன் படத்தின் சாய் பல்லவி கதாபாத்திர வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


 
 

Share this story