இணையத்தில் வைரலாகும் சாய் பல்லவியின் நடன வீடியோ...!

sai pallavi

நடிகை சாய் பல்லவி தனது உறவினரின் திருமண நிகழ்வில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் சாய் பல்லவி. சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் வெளிவந்த ’அமரன்’ திரைப்படமும் தெலுங்கில் வெளிவந்த ’தண்டேல்’ திரைப்படமும் பெருவாரியான வணிக வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது உறவினர் திருமண நிகழ்வில்உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


கோத்தகிரி அருகில் உள்ள மேல் அனையட்டி படுகர் கிராமத்தில் நடைபெற்ற தந்து உறவினர் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளார் சாய் பல்லவி. திருமணத்தில் உறவினர்களுடன் சேர்ந்து படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி அனைவரையும் அசத்தியுள்ளார் சாய் பல்லவி. தற்போது அவர் நடனமாடிய வீடியோ சாய் பல்லவியின் உறவினர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story