ஜி.வி.பிரகாஷ் உடனான நட்பு தொடரும்- சைந்தவி

ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு பெண்குழந்தை பிறந்தது!!

வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது, எங்கள் 24 வருட நட்பு மீண்டும் தொடரும் என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்.

“என் கணவர் தான் என் ஹீரோ” : விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி பிரகாஷ் – சைந்தவி ஜோடி!

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் அண்மையில் அறிவித்திருந்தனர்.  நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் தங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும், இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

Image

இந்நிலையில் பிரிந்தாலும் நட்பு தொடரும் என சைந்தவி விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், “சமூக வலைதளங்களில் எங்களின் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் வருத்தமளிக்கிறது. எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மன உளைச்சலைத் தருகிறது. எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை, எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. பள்ளி காலத்தில் இருந்தே ஜி.வியும் நானும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இனியும் அந்த நட்பைத் தொடர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this story