சீதை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க என்ன காரணம் -சாய் பல்லவி கூறிய தகவல்

sai pallavi

தன்னை நிதானமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள தியானம்தான் காரணம் என்றார், சாய் பல்லவி. மேலும் அவர் கூறுகையில், ‘ஒருநாள் கூட என்னால் தியானம் செய்யாமல் இருக்க முடியாது. ஒருவேளை நான் தியானம் செய்ய தவறினால், எனது மனநிலை சமநிலையற்றதாக இருப்பது போல் தோன்றும். ‘ராமாயணா’ படப்பிடிப்பிலும் தியானத்தை தொடர்ச்சியாக கடைபிடித்ததால், சீதை கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து உடனடி நிவாரணம் தருவதுடன், மனத்தெளிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க தியானம் உதவுகிறது. நீண்ட காலத்தின் அடிப்படையில் அகங்காரத்தை குறைத்து உணர்ச்சி ரீதியான சமநிலையையும், சவால்களை கையாள்கின்ற மன உறுதியையும் தியானம் வழங்குகிறது. இனி தியானத்தை தொடங்க விரும்புவோர், முதலில் வசதியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி, மூச்சின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளிழுக்கும்போது ஆற்றலையும், வெளியே விடும்போது மன இறுக்கம் நீங்குவதையும் உணர வேண்டும்’ என்றார்.

Share this story