“சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் சொல்வது கஷ்டமா இருக்கு”- சாக்‌ஷி அகர்வால் பேட்டி

gg

பிக்பாஸ் 3 மூலம் பிரபலமானவர் நடிகை  சாக்ஷி அகர்வால், இவர் தமிழ் படங்களில் அரண்மனை 3, பஹீரா, டெடி, காலா, ராஜா ராணி, விசுவாசம் மற்றும்  மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த அவர் தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது, அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை சாக்ஷி அகர்வால், "விஜய் போல் இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது.. ஆனால், சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் சொல்வது தான் கஷ்டமா இருக்கு".. என நழுவலாக பதிலளித்தார். 


 

Share this story