பாவாடை தாவணியில் பொங்கல் வைத்த சாக்ஷி அகர்வால் - ஸ்பெஷல் கிளிக்ஸ்.

photo

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாக்க்ஷி அகர்வால் பாவாடை தாவணியில் கலக்கலான புகைப்படத்தை எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

photo

ஐடி துறையில் பணியாற்றிக்கொண்டே மாடலின் துறையில் நுழைந்து, தற்போது நடிகையாக சினிமா துறையில் ஒரு கலக்கு கலக்கிவருகிறார் சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில், ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் ஒரு படி மேலே போய் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் கூட்டணி போட்ட ‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் இளைய மருமகளாக நடித்திருந்தார். அதே போல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

photo

என்னதான் இவர் பல படங்களில் நடித்தாலும்; இவருக்கு பிரபலத்தை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இதில் கலந்து கொண்ட பின் தான் சாக்ஷியின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அங்கு கவினை காதலித்து பல சர்ச்சையில் சிக்கினார் சாக்ஷி, தொடர்ந்து பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேறியபின் எக்கச்சக்கமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோயினாக மட்டுமே நடிக்காமல், வித்தியாசமான  கதாபாத்திரங்களையும்,  துணை நடிகை கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.

photo

அந்த வகையில் சோஷியல் மீடியா பக்கமும் அதிகமாக கவனம் செலுத்துன் சாக்ஷி பொங்கலை முன்னிட்டு குடும்ப பெண்ணாக மாறி பாவாடை தாவணியில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

photo

Share this story