"ஊழல் வர்க்கத்தை வேரோடு களையும் கதை" -சக்தி திருமகன் விமர்சனம்

vijay antony
இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆன படம் சக்தி திருமகன் .திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி, எளியவர்களுக்கு பணம் வாங்காமல் பல்வேறு உதவிகள் செய்கிறார். அரசியல் சாணக்கியர் ‘காதல் ஓவியம்’ கண்ணன் என்கிற சுனில் கிருபளானி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட அவரை அப்பதவிக்கு வரக்கூடாது என்பதில் முட்டுக்கட்டை போடும் விஜய் ஆண்டனி, ஒட்டுமொத்த அரசியல் அதிகார மற்றும் ஊழல் வர்க்கத்துக்கு முடிவு கட்ட தீர்மானிக்கிறார். அவரது பின்புலம் என்ன என்பது மீதி கதை.
மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து, அரசியல் சிஸ்டத்தை ஆட்டம் காண வைக்கும் கிட்டு என்ற கேரக்டரில், முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவருடன் பயணிக்கும் அட்வைசர் செல் முருகன் கவனத்தை ஈர்க்கிறார். விஜய் ஆண்டனி மனைவி திரிப்தி ரவீந்திரா, தனது கண்களாலேயே உணர்வுகளை கடத்திவிடுகிறார். அரசியல் குள்ளநரித்தனத்தை ‘காதல் ஓவியம்’ கண்ணன் அலட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். வாகை சந்திரசேகர், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

Share this story