ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகிறது "சாலா" திரைப்படம்

Sala
பீப்பிள் மீடியா ஃபேக்டரி டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாலா.  தொடரி, கும்கி 2 படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.டி.மணிபால் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தீரன் கதாநாயகனாகவும், அறிமுக நடிகையான ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். மதுப்பழக்கத்தின் சமகால சமூகப் பிரச்சினையை இத்திரைப்படம் ஆராய்வதாக கூறப்படுகிறது.
Sala

Share this story