சலார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடக்கம்
கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், சலார் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சலார் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.