சலார் 2 மிக பயங்கரமாக இருக்கும் - ஷ்ரேயா ரெட்டி

சலார் 2 மிக பயங்கரமாக இருக்கும் - ஷ்ரேயா ரெட்டி 

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

சலார் 2 மிக பயங்கரமாக இருக்கும் - ஷ்ரேயா ரெட்டி 

இந்நிலையில், பட நிகழ்ச்சியில் பேசிய ஷ்ரேயா ரெட்டி, சலார் 2' படத்தில் எனது கதாபாத்திரம் நீண்ட நேரம் இடம் பெறும். முதல் பாகத்தில் கதாபாத்திர அறிமுகம் மட்டுமே இருந்தது. இரண்டாம் பாகத்தில் தான் பல விஷயங்கள் நடக்கும், அது மிகவும் அதிரடி காட்சிகள் நிறைந்து காணப்படும் என தெரிவித்துள்ளார். சலார் படத்தில் ஷ்ரேயா ரெட்டி, ராதா ராமா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Share this story