சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியானது. அண்மையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்

இந்நிலையில், சலார் படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும், படத்திற்கு முன்பதிவும் தொடங்கியது. 
 

Share this story